மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தரவேண்டும் பெற்றோர் மனு


மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தரவேண்டும் பெற்றோர் மனு
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தரவேண்டும் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு பெற்றோர் மனு

சத்திரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி ஜமீன் தெருவை சேர்ந்த வரதராஜன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்கள் திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுடைய மகன் காந்தி (வயது 45). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் சலோம் என்னுமிடத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காந்தியின் இரண்டு கைகள் மற்றும் பற்கள் சேதமடைந்தது. இதன் காரணமாக அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு திரும்பி செல்ல அனுமதிக்கும்படி நிறுவன உரிமையாளரிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் காந்தியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை வைத்துக்கொண்டு வேறு தொழிலாளி வேலைக்கு வந்த பின்னர் தான் அனுப்புவதாக கூறி வருகிறார். அந்த நிறுவனத்தில் கொத்தடிமையாக பணிபுரிந்து வரும் எனது மகனை மீட்டுத்தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். 

Related Tags :
Next Story