மாதா ஆலயத்தில் திருடப்பட்ட குழந்தை இயேசு சிலை மீட்பு


மாதா ஆலயத்தில் திருடப்பட்ட குழந்தை இயேசு சிலை மீட்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 4:30 AM IST (Updated: 17 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

மாதா ஆலயத்தில் திருடப்பட்ட குழந்தை இயேசு சிலை மீட்பு

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே எருக்கூரில் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று இந்த ஆலயத்தில் இருந்த ஐம்பொன்னால் ஆன 2 அடி உயரம் கொண்ட குழந்தை இயேசு சிலை திருட்டுபோனது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஐம்பொன்னால் ஆன குழந்தை இயேசு சிலையை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்மநபர், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் ஆமைப்பள்ளம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கலியமூர்த்தி (வயது 36) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளிடம் போலீசாரும், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாரும் கலியமூர்த்தி வீட்டிற்கு சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு எருக்கூர் மாதா ஆலயத்தில் திருடப்பட்ட ஐம்பொன்னால் ஆன குழந்தை இயேசு சிலை இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார், சிலையை மீட்டு கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அண்ணாமலை நகர் போலீசார், மற்றொரு வழக்கு தொடர்பாக கலியமூர்த்தியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story