தபால் நிலையங்களில் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்


தபால் நிலையங்களில் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Nov 2017 3:27 AM IST (Updated: 17 Nov 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், கோவா மாநிலங்களில் வருகிற ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

மத்திய, மாநில அரசுகளின் எந்தவொரு சேவையையும் பெற வேண்டும் என்றால், ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆகையால், மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களில், இதுவரையில் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்காதவர்கள், வருகிற ஜனவரி மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக இரு மாநிலங்களிலும் 1,200–க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தபால் அதிகாரி எச்.சி.அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, தபால்துறையை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், தபால் சேவையுடன் சேர்ந்து ஆதார் அட்டை வினியோகிக்கும் பணியிலும் அவர்கள் கூடுதலாக ஈடுபடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே, இரு மாநிலங்களிலும் 120–க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில், ஆதார் அட்டைகளில் திருத்தம் செய்யும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Next Story