மோட்டார்சைக்கிளில் சென்று அரசு பஸ்சை வழிமறித்த வாலிபர்


மோட்டார்சைக்கிளில் சென்று அரசு பஸ்சை வழிமறித்த வாலிபர்
x
தினத்தந்தி 17 Nov 2017 5:12 AM IST (Updated: 17 Nov 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு பஸ் ஒன்று வேகமாக திரும்பிய போது மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது லேசாக உரசியதாக தெரிகிறது.

வேலூர்,

திருப்பதியிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு பஸ் ஒன்று வேலூர் அண்ணாசாலையில் இருந்து திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் பகுதியில் ஆரணி ரோட்டுக்கு வேகமாக திரும்பியபோது மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது லேசாக உரசியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் அந்த பஸ் டிரைவரை கண்டித்தனர். ஆனால் டிரைவர் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் பஸ்சை ஓட்டிச்சென்றதால் ஆவேசமடைந்த வாலிபர் ஒருவர் பஸ்சை மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து விரட்டி சென்று போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே அந்த பஸ்சை வழிமறித்தார்.

பின்னர் பஸ்சை செல்லவிடாமல் மோட்டார்சைக்கிளை குறுக்காக நிறுத்தி போலீசார் வருவார்கள் என நினைத்து அங்கேயே நின்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் போலீசார் வராததால் அவராகவே பஸ் அங்கிருந்து செல்ல வழிவிட்டார்.


Next Story