ஏலேலோ ஐ லசா..! ஏரோபிளேன் ஐ லசா..!
துபாய் போலீசார், உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தி வருகிறார்கள்.
சைக்கிளில் ரோந்து பணி, நடைபயணமாக ரோந்து பணி என துபாய் போலீசாரின் முயற்சி ‘துபாய் பிட்னஸ் சேலஞ்’ என்ற பெயரில் அடிக்கடி வைரலாகப் பரவும். அவர்களது சமீபத்திய முயற்சி தான் ‘ஏரோபிளேன் ஐ லசா’!
320 டன் எடையுள்ள ஏர்பஸ் ஏ–380 விமானத்தை ‘ஏலேலோ ஐ லசா!’ என்று கோஷம் போட்டு இழுத்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்–ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘ஹாட் டிரண்ட்’ ஆக பரவ, அது உலக சாதனையாகவும் மாறிவிட்டது. போலீசாரின் முயற்சியை கண்டுவியந்த கின்னஸ் குழுவினர், சாதனை மடலோடு துபாய் பறந்திருக்கிறார்கள். ஏனெனில் இவ்வளவு பெரிய விமானத்தை வெறும் கைகளால் இழுப்பது சாத்தியமில்லையாம். எனவே துபாய் போலீசாருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் குஷியான துபாய் போலீஸ், அடுத்தடுத்த சாதனைகளுக்கு தயாராகி வருகிறார்கள்.
Related Tags :
Next Story