திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Nov 2017 2:15 AM IST (Updated: 17 Nov 2017 6:20 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

திசையன்விளை,

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

ஆலய திருவிழா கொடியேற்றம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 134–வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். முன்னதாக திருப்பவனி நடந்தது. தொடர்ந்து திருப்பலியை ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைத்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். திருவிழா வருகிற 26–ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை திருப்பவனியும், திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

பெருவிழா கூட்டுத்திருப்பலி

8–ந் திருநாளான 24–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 25–ந் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார்.

26–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவில் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண் பிரிட்டோ, பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அன்பியங்கள், இறை மக்கள் செய்துள்ளனர்.


Next Story