என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்; ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு


என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்; ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
x
தினத்தந்தி 18 Nov 2017 3:45 AM IST (Updated: 18 Nov 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு கல்லூரியின் துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் கோபி வரவேற்றார். இதில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இக்கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் படிக்கும் என்ஜினீயர் படிப்பு மிகவும் சிறப்பான படிப்பாகும். இப்படிப்பு விஞ்ஞானத்தில் தத்துவமாகும். மாணவர்கள் நாம் என்ன செய்யப்போகிறோம், என்ன வேலைக்கு போகப்போகிறோம் என திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்த இலக்கையும், சரியான பாதையையும் அடைய முடியும். படிக்கும் மாணவர்கள் முதலில் தாய், தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி கூறுவது என்பது தலைமை பண்பாகும். அப்போது தான் மனிதாபிமானம் ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடங்களையும், சமூக சிந்தனைகளை பற்றிய கதைகளை கூறவேண்டும். அப்போது தான் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். என்ஜினீயர் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கான எண்ணங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல்ல கல்வியை கற்று தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story