கல்குவாரியை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வையம்பட்டி,
வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் உள்ள கல்குவாரி உடனே மூட வேண்டும். கல்குவாரி அமைக்கப்பட்ட போது அழிக்கப்பட்ட தடுப்பணைகளையும், குளங்களையும் உடனே கட்டிக் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வீராச்சாமி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சண்முகானந்தம், மணப்பாறை நகர செயலாளர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story