காடுவெட்டு தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


காடுவெட்டு தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2017 10:50 PM GMT (Updated: 17 Nov 2017 10:50 PM GMT)

வெள்ளத்தில் சேதம் அடைந்த காடுவெட்டு தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி–திருவேற்காடு இடையே காடுவெட்டு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் இந்த தரைப்பாலம் இடிந்து விழுந்தது. சேதம் அடைந்த இந்த தரைப்பாலத்தை சீரமைக்கவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருவேற்காடு, கோலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் இந்த தரைப்பாலம் வழியாகத்தான் வாகனங்களில் சென்று வருவார்கள். வெள்ளத்தில் இந்த தரைப்பாலம் சேதம் அடைந்து விட்டதால் வேலப்பன்சாவடி வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. சிலர் உடைந்த தரைப்பாலத்தின் மீதே கற்களை அடுக்கிவைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.


Next Story