பால் தாக்கரே நினைவு சின்னத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கீடு


பால் தாக்கரே நினைவு சின்னத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 17 Nov 2017 10:58 PM GMT (Updated: 17 Nov 2017 10:58 PM GMT)

பால் தாக்கரே நினைவு சின்னத்துக்கு விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை, ந

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் 5–வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘பால்தாக்கரேக்கு நினைவு சின்னம் அமைப்பதற்கான நிலத்தை பால்தாக்கரே நினைவக அறக்கட்டளையிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் இதனை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் அமைந்துள்ள மேயர் பங்களாவில் பால் தாக்கரேக்கு நினைவு சின்னம் எழுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story