உலகை தலைகீழாகக் காணும் பெண்!


உலகை தலைகீழாகக் காணும் பெண்!
x
தினத்தந்தி 18 Nov 2017 1:16 PM IST (Updated: 18 Nov 2017 1:16 PM IST)
t-max-icont-min-icon

போஜனா டானிலோவிக் என்ற பெண், நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்.

செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜனா டானிலோவிக் என்ற பெண், நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்.

ஆம், போஜனா மற்ற எல்லோரையும்போல சாதாரணமாகக் காட்சியளித்தாலும், உலகில் உள்ள மற்ற அனைத்து மனிதர்களையும் விட வித்தியாசமானவர் இவர்.

நம் எல்லோராலும் காட்சிகளை நேராகப் பார்க்க முடிகிறது. ஆனால் போஜனாவுக்கு அப்படி நேராகத் தெரிவதில்லை, தலைகீழாகத்தான் தெரிகிறது. இவரால் எந்தக் காட்சியையும், எழுத்துகளையும், சம்பவங்களையும் நேராகப் பார்க்க முடியாது. அனைத்துமே தலைகீழாகத்தான் தெரியும்!

போஜனாவின் கண்களைப் பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள், அவரின் கண்களில் எந்த குறைபாடும் இல்லை என்பதை அறிவித்துவிட்டனர். இப்பெண்ணின் மூளைதான் இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாகப் புரிந்துகொள்கிறது.

28 வயதான இப்பெண், வேலை தேடுபவர்களுக்கு உதவும் அமைப்பில் தற்போது பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கிறது.

வீட்டிலும், தொலைக்காட்சியின் காட்சிகளை தலைகீழாகக் காட்டும் கண்ணாடி வழியாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.

போஜனாவின் இந்த வினோதமான குறைபாட்டுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இக்குறைபாடு, ‘ஸ்பேட்டியல் ஒரியன்டேஷன் பினாமினன்’ என்று அழைக்கப்படுகிறது.

உலகில் விசித்திரமான உடல் குறைபாடுகளுக்குக் குறைவே இல்லை! 

Next Story