நெல்லையில் காப்பகத்தில் இருந்து மாணவியை கடத்திச்சென்ற காதலன் கைது
நெல்லையில் காப்பகத்தில் இருந்து மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லையில் காப்பகத்தில் இருந்து மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
காதல் பிரச்சினைநெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் மற்றும் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த பிளஸ்–1 படித்துக் கொண்டிருந்த 2 மாணவிகள் திடீரென்று மாயமானார்கள். திருமண வயதை எட்டாமல் 2 பேரும் காதல் வலையில் சிக்கியதால் அவர்களை போலீசார் மீட்டு, நெல்லை சந்திப்பில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதில் ஒரு மாணவியை உடனடியாக போலீசார் மீட்டு மீண்டும் காப்பகத்தில் சேர்த்தனர்.
வாலிபர் கைதுசுத்தமல்லி பகுதியை சேர்ந்த மாணவியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை சுத்தமல்லியை சேர்ந்த சங்கர் (வயது 22) என்பவர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் காதலித்து வந்ததும், திருச்செந்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீசார் திருச்செந்தூருக்கு சென்று சுந்தரை கைது செய்தனர். அவருடன் தங்கி இருந்த மாணவியை மீட்டு மீண்டும் காப்பகத்தில் சேர்த்தனர்.