798 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி


798 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
x
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 5:29 PM GMT)

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு மடிகணினி வழங்கும் விழா நடந்தது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு மடிகணினி வழங்கும் விழா நடந்தது.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு 798 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக அய்யம்பேட்டை ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், வி.சோமசுந்தரம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரதராஜுலு, சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story