மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2017 10:15 PM GMT (Updated: 18 Nov 2017 8:33 PM GMT)

ரே‌ஷன் கடைகளில் கடந்த 1–ந் தேதி முதல் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுவில் இருந்து 25 ரூபாயக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ரே‌ஷன் கடைகளில் கடந்த 1–ந் தேதி முதல் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுவில் இருந்து 25 ரூபாயக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே சர்க்கரை விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பும் தி.மு.க. சார்பில் வருகிற 22–ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


Next Story