மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Nov 2017 10:24 PM GMT (Updated: 18 Nov 2017 10:24 PM GMT)

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சேக்கிழார் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (25), கடந்த சில மாதங்களாக கணேசன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிலேயே இருந்தார். ஈஸ்வரி வேலைக்கு சென்று வந்தார். மனைவி வேலைக்கு செல்வதால் அவர் மீது கணேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த ஈஸ்வரி கோபித்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை முதல் கணேசன் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இரவு அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது கணேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story
  • chat