வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..


வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..
x
தினத்தந்தி 19 Nov 2017 11:59 AM IST (Updated: 19 Nov 2017 11:59 AM IST)
t-max-icont-min-icon

ஏலக்காயை ஒரு வாசனைப் பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதில் உடலுக்கு பலன் அளிக்கக்கூடிய பலவிதமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன.

லக்காயை ஒரு வாசனைப் பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதில் உடலுக்கு பலன் அளிக்கக்கூடிய பலவிதமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன.

* ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை அதன் மூலம் கட்டுப்படுத்தலாம். வாய் துர்நாற்றத்தையும் அது போக்கும்தன்மை கொண்டது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.

* ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. மூச்சுக்குழாயில் காற்று தடையின்றி சென்று வர உதவும். சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு இருக்கிறது.

* ஏலக்காயில் எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தவேண்டும். குழந்தைகளின் உடல் எரிச்சலைப் போக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

* இதில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றன.

* தொலைதூரம் வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படும். பயணிக்கும்போது இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த அவஸ்தை எதுவும் ஏற்படாது.

* குரல் வளத்தை பேண நினைப்பவர் களுக்கு ஏலக்காய் ஏற்றது. இசை ஈடுபாடு கொண்டவர்கள் ஏலக்காயை வெற்றிலையில் மடித்து மென்று அதன் சாறை மட்டும் தொண்டைக்குள் இறக்கி சிறிது சிறிதாக விழுங்கவேண்டும். பின்பு சிறிதளவு வெதுவெதுப்பான நீர் பருகலாம். இது தொண்டை கரகரப்பையும் போக்கும் சக்தி கொண்டது.

*  தொண்டையில் புண் ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் முள்ளங்கி சாறு எடுத்து அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி கலந்து பருகவேண்டும்.

* ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். இதை எளிதாக தயாரிக்கலாம். தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் சிறிதளவு இஞ்சியை நசுக்கிப்போடுங்கள். சிறிது ஏலக்காய் பொடி, சில துளசி இலைகளையும் அதில் சேருங்கள். சிறிதளவு கிராம்புத்தூளும் கலந்திடுங்கள். கொதித்த பின்பு இறக்கி வெதுவெதுப்பாக குடியுங்கள். மேற்கண்ட அவஸ்தைகளில் இருந்து விடுபடலாம்.

*  வெயிலில் வெளியே செல்ல விரும்புகிறவர்கள், ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றபடியே சென்றால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

* அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டுவரவேண்டும்.

* குளிரால் அவதிப்படுகிறவர்கள் சிறிதளவு ஏலக்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்துக்கொள்ளவேண்டும். அது உடலுக்கு கத கதப்பை தரும்.

* ஏலக்காய் அதிக வாசனை தரும் என்பதால் அதனை அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கிறார்கள். சோப்பு, முகபவுடர், பாடி வாஷ் போன்றவைகளிலும் அது சேர்க்கப்படுகிறது.

* ஏலக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் டீயில் ஏலக்காயை போட்டு பருகலாம். 

Next Story