சாலைப்போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

புதுச்சேரி,
புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்கக்கோரி நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதைக்கண்டித்து சாலைப்போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் அவைகள் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தொழிலாளர்கள் பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். சாலைப்போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக புதுவை வரும் சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இதற்காக பெரும்பாலும் புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்வர். ஆனால் நேற்று சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓடாததால் அவர்களும் பெரிதும் அவதியடைந்தனர்.

Related Tags :
Next Story