உர நிறுவனத்தில் வேலை
தேசிய உரத்துறை நிறுவனம் உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. லாபம் ஈட்டும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவில் என்ஜினீயர் பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் மேலாளர் பணியிடமும், மெட்டீரியல்ஸ் பிரிவில் முதுநிலை மேலாளர் பணியிடமும் உள்ளது. மொத்தம் 65 பேர் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும், மேலாளர், முதுநிலை மேலாளர் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பி.எஸ்சி., எம்.பி.ஏ. மற்றும் பி.இ., பி.டெக். படிப்புகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, பணி அனுபவ விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் காணலாம்.
விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-12-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதி யில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 27-12-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

Related Tags :
Next Story