தெம்பும், தைரியமும் இருந்தால் தமிழக சட்டசபையை கூட்ட தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு, ஸ்டாலின் சவால்
தெம்பும், தைரியமும் இருந்தால் தமிழக சட்டசபையை உடனடியாக கூட்ட தயாரா? என்று முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு, ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
பாவூர்சத்திரம்,
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் ஆர்.கே.நகரில் தி.மு.க சட்டமன்ற வைர விழா, முரசொலி பவள விழா மற்றும் பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ஆர்.கே.காளிதாசன், அவைத்தலைவர் முத்துப்பாண்டி, துணைத்தலைவர் நடராஜன், பொருளாளர் ஷேக் தாவூது, பேபி ரஜப் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படபோகிறது. அதாவது தமிழக மக்கள் எதிர்பார்ப்பது போல் தி.மு.க ஆட்சி விரைவில் மலரும். கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொண்டே இருக்கிறோம். வெற்றி. தோல்விகளை மறந்து நாட்டு மக்களுக்கு உழைக்கும் கட்சி தி.மு.க.
தற்போது தி.மு.க.வில் பல்வேறு கட்சியினர், மாற்றுக்கட்சியினர் தங்கள் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். சாரை. சாரையாக சேருகின்றனர். தி.மு.க.வை காப்பாற்றவோ, வலு சேர்க்கவோ அல்லது தங்களை பாதுகாக்கவோ அவர்கள் வரவில்லை. ஒட்டு மொத்த தமிழகத்தை காப்பாற்றுவதற்காக தி.மு.க.வில் சேருகின்றனர்.
இவ்வாறு புதிதாக தி.மு.க.வில் சேர்ந்து இருப்பவர்களை நான் வரவேற்கிறேன். சின்ன பேரூராட்சி பகுதியான இங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த அளவுக்கு இங்கே கூட்டம் கூடியுள்ளது என்றால், எந்த அளவுக்கு தி.மு.க. எழுச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.
எடப்படி பழனிசாமி அரசு பள்ளி மாணவ, மாணவிகளை, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தாய்மார்களை கட்டாயப்படுத்தி கூட்டத்துக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் தி.மு.க. கூட்டத்துக்கு லட்சியத்துடன், கொள்கை உறுதியுடன் வந்துள்ளனர். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது நெல்லை மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த 6 ஆண்டாக தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இல்லை. ஆனால் மக்கள் மனதில் தி.மு.க ஆட்சி இருக்கிறது.
எப்படி என்றால் தமிழகம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமன்றி தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள குளங்களை, நீர் நிலைகளை தூர்வாரி நல்லமுறையில் தண்ணீர் தேங்குவதற்கு வழிவகை செய்துள்ளனர். அதன் மூலம் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடப்பது ஆட்சி இல்லை. இது ஒரு காட்சி. அ.தி.மு.க. ஆட்சி கோமா நிலையில் உள்ளது.
ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எத்தனையோ உறுதிமொழிகளை மக்களுக்கு அளித்தார். அதில் ஒன்று தான் பூரண மதுவிலக்கு. அதனை நிறைவேற்றுவதை விட்டு, விட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு மக்கள் வரிப்பணத்தை வைத்து நீதிமன்றத்தில் போராடி வருகிறது இந்த அரசு.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தி.மு.க வலியுறுத்தியது. ஆனால் அதனை நிறைவேற்றியதன் விளைவு, ரேஷன் கடையில் ரூ.13.50-க்கு விற்கப்பட்ட சீனி ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உளுந்தம் பருப்பு இனிமேல் ரேஷன் கடைகளில் கிடையாது. விரைவில் அரிசியும் கிடையாது என்று அறிவிப்பார்கள். அதன் பிறகு ரேஷன் கடையும் கிடையாது என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த அவல நிலையை கண்டித்து நாளை மறுநாள்(அதாவது நாளை) தமிழகத்தில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க மற்றும் பிற கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்துக்கு மக்கள் பெருமளவு ஆதரவு அளிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் அரசு திட்டங்களை அறிவிப்பதை விட்டு விட்டு, தி.மு.க. வை விமர்சிப்பதும், அவர்கள் அணிகளுக்கு உள்ளே இருக்கும் பிரச்சினைகளை பற்றி பேசுவதும்தான் நடக்கிறது. அதில் ஒன்று, 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க மைனாரிட்டி ஆட்சி என்று பேசுகிறார்கள். தி.மு.க. தனிப்பட்ட முறையில் மைனாரிட்டி எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்தாலும் காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளின் உதவியோடு 5 ஆண்டுகளாக கலைஞர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நிலை என்ன? தெம்பும், தைரியமும் இருந்தால், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட தயாராக இருக்கிறாரா?
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நெல்லையில் கந்துவட்டிக்கு ஒரு குடும்பம் தீக்குளித்து மாண்டது. அவர்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியதே இதற்கு காரணம். இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்ற வக்கீல் செம்மணி, கந்துவட்டி தொடர்பாக கேலி சித்திரம் வரைந்த பாலா ஆகியோரை போலீசார் நள்ளிரவில் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அரசா?. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கும் இல்லை. அமைச்சர்களிடம் ஒழுங்கும் இல்லை.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கினோம். அது எந்த நிலையில் உள்ளது? நாங்குநேரியில் முரசொலி மாறானால் உருவாக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தை அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டு விட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் கீழ் அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒரு வீடு கூட கட்டிக் கொடுக்கப்படவில்லை.
அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலையை விரைவில் உருவாக்க அனைவரும் தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், முன்னாள் எம்.பி. தங்கவேலு, எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் ஆகியோர் பேசினார்கள். ஆர்.கே.காளிதாசன் தலைமையில் அ.தி.மு.க. பண்பொழி நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
விழாவில் முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ஷேக் அப்துல்லா, வளன் அரசு, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் திருமலைச்சாமி, தொழில் அதிபர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் வக்கீல் செல்வகுமார், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சாகுல் அமீது, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் .செண்பககுற்றாலம், தலைமை செயற்குழு உறுப் பினர் சீனிவாசன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா தலைவர், மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, மாவட்ட துணை செயலாளர்கள் ஆயாள் .நடராஜன், .மாடசாமி, தென்காசி ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, ரஹீம், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், நகர செயலாளர்கள் செல்வகுமார், சங்கரன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சூட்டுச்சாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காசிதர்மம் துரை, சக்தி, லிங்கராஜ், வசந்தம் சுப்பையா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகசாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் முகம்மது இஸ்மாயில், இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், நெசவாளர் அணி அமைப்பாளர் முகம்மதுஅலி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரமகுரு, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பூங்கோதை, விவசாய அணி துணை அமைப்பாளர் வனராஜ், வர்த்க்க அணி துணை அமைப்பாளர் சூர்யா சுரேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், ஹக்கீம், முத்துவேல், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஷெரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story