இலவச துணிகள் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
இலவச துணிகள் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கைலி, சேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டிற்கான இலவச துணிகள் இதுவரை வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும் உடனடியாக பயனாளிகளுக்கு துணிகள் வழங்கக்கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி துணை செயலாளர் செல்வம், கிளை செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொகுதி செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
இலைகளால் ஆன ஆடை
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் தங்கள் உடலில் இலைகளை ஆடைபோல் சுற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஹேமலதா, தொகுதி பொருளாளர் தனஞ்செழியன், துணை செயலாளர் கருணாகரன், கிளை செயலாளர்கள் தென்னரசன், சிவக்குமார் மற்றும் எழில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story