வியாபாரிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி பழனி கோர்ட்டு முன்பு உறவினர்கள் முற்றுகை
வியாபாரிகள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, பழனி கோர்ட்டை உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி,
பழனி பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 38). இவருடைய மனைவி சம்சாத் பேகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (32). இவருடைய மனைவி ரகமத்நிஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பீர்முகமதுவும், அப்துல்ரகுமானும் பழனி அடிவாரம் பகுதியில் கடை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் பஸ் நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த பழனி நகர் போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இரவு 8 மணி அளவில் 2 பேரையும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த சம்சாத் பேகம், ரகமத் நிஷா மற்றும் உறவினர்கள் கோர்ட்டு முன்பு முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் கணவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக கூறி சம்சாத் பேகமும், ரகமத் நிஷாவும் கோஷமிட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில உறவினர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் போலீசார் வேனில் அழைத்துச்செல்ல முயன்றனர். இதைப்பார்த்த உறவினர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் பழனி-திண்டுக்கல் சாலையில் ஓடினர். பின்னர் அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மறித்து அதன் அடியில் 2 பேரும் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளார்களா? என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து பீர்முகமது, அப்துல்ரகுமானின் மனைவிகள் கூறுகையில், நேற்று காலை 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் எங்கள் கணவர்கள் லாட்டரி வியாபாரி ஒருவரின் பெயரை தெரிவித்தனர். மேலும் அவர் கூறியதால் தான் லாட்டரி விற்பனை செய்கிறோம் என்றனர். இதையடுத்து மற்ற 3 பேரையும் விடுவித்த போலீசார் எங்கள் கணவர்களை மட்டும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது லாட்டரி விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்யாமல் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதையறிந்தே நாங்கள் கோர்ட்டை முற்றுகையிட்டோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையென்றால் குடும்பத்தினருடன் கோர்ட்டு முன்பு தீக்குளிப்போம் என்றனர்.
இதையடுத்து மற்ற உறவினர்களுடன் அவர்கள் பழனி நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று லாட்டரி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story