மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் விவசாயிகள் 6 மணி நேரம் மறியல் போராட்டம்
மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள், மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் 6 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் ஒருபோக பாசனப்பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்பு மேலூரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், “மேலூர் பகுதி ஒருபோக பாசன விவசாயம் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுசம்பந்தமாக கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பி இருந்தனர். மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவசர கூட்டம் நடத்தி, கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி மேலூர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.
மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களான வெள்ளலூர்நாடு, திருவாதவூர், கொட்டக்குடி, பனங்காடி, பதினெட்டாங்குடி, வெள்ளரிப்பட்டி, நரசிங்கம்பட்டி, ஆ.வெள்ளாளப்பட்டி, கிடாரிப்பட்டி, சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், மேலவளவு, கீழவளவு, நாவினிப்பட்டி, கீழையூர், ஆமூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மேலூருக்கு நேற்று திரண்டு வந்தனர்.
அவர்கள் ஒருபோக பாசன விவசாய சங்கத்தலைவர் முருகன் முன்னிலையில் மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் 1 கி.மீ. தூரம் ஊர்வலமாகச் சென்று, மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கியது. அப்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் கள்ளந்திரி இருபோக பாசன பகுதிகளில் தண்ணீர் திறந்த பின்னர் மேலூர் ஒருபோக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் நடுரோட்டில் சாமியானா பந்தல் அமைத்து உட்கார்ந்து கொண்டனர். திரளான பெண்களும் மறியலில் பங்கேற்றனர்.
மறியல் காரணமாக, திருச்சி-மதுரை நான்குவழிச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்,கார், லாரிகள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, வாகனங்கள் அழகர்கோவில், நத்தம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் செல்போன் மூலம் பேசினார்.
அப்போது அவர், வருகிற 27-ந்தேதி மேலூர் ஒருபோக பாசன பகுதிகள், திருமங்கலம் பி.டி.ஆர். நீட்டிப்பு கால்வாய், தந்தை பெரியார் நீட்டிப்பு கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறியதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, மாலை 5 மணி அளவில் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த 6 மணி நேர மறியல் காரணமாக ஸ்தம்பித்த போக்குவரத்து சீராக பல மணி நேரம் பிடித்தது.

Related Tags :
Next Story