பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் குமாரவேல் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
நெல்லை,

ஊதியக்குழு பரிந்துரைகளை அனைவரும் அறியும் வகையில் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். 1–1–2016 முதல் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் ரூ.1000 மருத்துவப்படி வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் கோபாலன், செந்தில் ஆறுமுகம், அபுபக்கர், ராஜேசுவரன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, இணை செயலாளர்கள் சலீம் முகமது மீரான், பாலசுப்பிரமணியன், துரை டேனியல், ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் ஆறுமுகம், போராட்டத்தை முடித்துவைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் வைகுண்டமணி நன்றி கூறினார்.