அரசு அனைத்து துறைகளின் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்


அரசு அனைத்து துறைகளின் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து துறைகளின் ஓய்வூதியர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அல்போன்ஸ் லிகோரி, முனியாண்டிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கையை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் சாம்பசிவன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கடந்த 1-1-16 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கியது போன்று குறைந்தபட்ச ஓய்வூதியத்துடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு போன்று மாதம் தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் திரவியம் நன்றி கூறினார். 

Next Story