கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களையக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சவுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டமைப்பு தலைவர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுகுமார், மாநிலசெயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல சங்க மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.எஸ்.ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
மத்தியஅரசு வழங்கியுள்ளதை போன்று குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருக்கும் இதே அளவில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 30.9.2017 வரை உள்ள 21 மாத காலத்திற்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதை போல் மாதந்தோறும் ஓய்வூதியர்களுக்கு ரூ.1,000 மருத்துவ படி வழங்க வேண்டும். 7-வது ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் அப்பாவு, நாகைபாலு, துரை உள்பட அரசு துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் திருவேங்கடம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story