நெடுங்கல்லில் மின்னலுடன் கனமழை: மேம்பால தடுப்பு சுவர் இடிந்து சேதம்

நெடுங்கல்லில் பயங்கர மின்னலுடன் பெய்த கன மழையில் மேம்பால தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்தது. இதை நேரில் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி நெடுங்கல். தென்பெண்ணை ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் நெடுங்கல் அணைக்கட்டு உள்ளது. இங்கு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே போச்சம்பள்ளி - காவேரிப்பட்டணத்திற்கு செல்லும் வகையில் காவக்கரை முருகன் கோவில் அருகே உயர்மட்ட மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள், காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். தற்போது, நெடுங்கல் பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ளதால், நெல் உதிர்த்து எடுக்கவும், காய வைக்கவும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை திடீரென நெடுங்கல் சுற்று வட்டார பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையின் போது மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மின்னல் தாக்கியது. இதில் சுமார் 2 அடிக்கு மேல் சுவர் இடிந்து, ஆற்றில் சிமெண்டு கற்கள் சிதறின. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மழையின்போது கோவிலின் அருகே நின்று கொண்டிருந்தோம். அப்போது பயங்கரமாக மின்னல் அடித்தது. திடீரென மேம்பால தடுப்பு சுவர் மீது மின்னல் தாக்கியதில் சுவர் இடிந்து சேதம் ஆனது. அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் இல்லை. சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story