பல்வேறு இடங்களில் திடீரென ஹெல்மெட் சோதனை போலீசார்-வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம்


பல்வேறு இடங்களில் திடீரென ஹெல்மெட் சோதனை போலீசார்-வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பல்வேறு இடங்களில் திடீரென ஹெல்மெட் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் கடந்த 20-ந் தேதி பொறுப்பு ஏற்றார். இதனை தொடர்ந்து அவர் மாநகரில் ஹெல்மெட் சோதனை நடத்த போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் கலெக்டர் அலுவலக சாலை, டி.வி.எஸ்.டோல்கேட், கே.கே.நகர், பாரதிதாசன் சாலை, வில்லியம்ஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதமாக ரூ.100 வசூலித்ததுடன் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் உள்ளதா? என்றும் சோதனை நடத்தினர்.

வாக்குவாதம்

நேற்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர்கள் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். ஒரு சில இடங்களில் போலீசாரின் இந்த திடீர் வாகன சோதனைக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அலுவலக வேலையாக அவசரமாக செல்வோரை மடக்கி பிடித்து ஹெல்மெட் வழக்கு பதிவு செய்வது ஏன்? என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் ஏற்கனவே இந்த உத்தரவு அமலில் தான் உள்ளது. ஆகவே கட்டாயமாக அபராதம் செலுத்துங்கள் என்று கூறி வசூலித்தனர்.


Next Story