உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தாலுகா கருமாத்து£ர் அருகே உள்ள கோட்டையூரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் டாஸ்மாக் கடை கடந்த 6மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்தக்கடையின் சுவரை இடித்து உடைத்து பூட்டை பிடுங்கி உள்ளே சென்றுள்ளனர். கடைக்குள் இருந்த 88 மாதுபான பெட்டிகளையும் இரண்டு பீர்பாட்டில் பெட்டிகளையும் தூக்கிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.4 லட்த்து 91 ஆயிரம் ஆகும்.
இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் செக்கானூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உசிலம்பட்டி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் பொற்கை அங்கு வரவழைக்கப்பட்டது. அது டாஸ்மாக் கடையிலிருந்து கோட்டையூர் காலனிவரை சென்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.