சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 23 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரே‌ஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு,

தமிழ்நாடு முழுவதும் ரே‌ஷன் கடைகளின் வினியோகம் செய்யப்படும் சர்க்கரை விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.13.50–ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து ரே‌ஷன் கடைகளின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 ரே‌ஷன் கடைகளின் முன்பு நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு வளையக்கார வீதி வி.வி.சி.ஆர்.நகர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணியம், தி.மு.க. பிரமுகர் டி.என்.ஏ.ஆனந்த், பகுதி பொறுப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் மாநகரின் உள்ள பல்வேறு கடைகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கோட்டை பகுதி செயலாளர் பொ.ராமச்சந்திரன் தலைமையில் முனிசிபல்காலனி, கோட்டை முனியப்பன்கோவில், ஜின்னாவீதி, கே.என்.கே.ரோடு, காந்திபுரம் 1–வது வீதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை ராமு, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் விஜயபாஸ்கர் உள்பட அந்தந்த பகுதி தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story