80 அடி சாலையை திறக்கக்கோரி பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


80 அடி சாலையை திறக்கக்கோரி பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 80 அடி சாலையை திறக்கக்கோரி பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு,

ஈரோடு பிரப் ரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி உள்ள சி.எஸ்.ஐ. பள்ளி வளாகம் உள்ளது. இங்குள்ள 12.66 ஏக்கர் நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சை நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது பிரப் ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 80 அடி சாலை திட்டத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரிய மாரியம்மன்கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நேற்று காந்திஜி ரோடு ஜவான் பவன் (முன்னாள் படைவீரர் நல அலுவலகம்) முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இயக்க தலைவர் இ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன், மாநில நிர்வாகி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்போம். 80 அடி திட்டச்சாலையை திறக்க வைப்போம் என்ற கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பா.ஜனதா வக்கீல் அணி மாநில செயலாளர் என்.பி.பழனிச்சாமி உள்பட பலர் பேசினார்கள். இயக்க ஒருங்கிணைப்பாளர் கைலாசபதி, பொருளாளர் ராஜ்கண்ணு, துணைத்தலைவர் சுப்பு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி, முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 68 சங்கங்கள் ஆதரவு அளித்தன. சில சங்கங்களின் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story