மாணவர்களிடம், ஆசிரியர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்


மாணவர்களிடம், ஆசிரியர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களிடம், ஆசிரியர்கள் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி,

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கும் நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி அரங்கம் ஆகிய இடங்களில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உயர்த்திட வேண்டும்

5, 6 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களை ஒருங்கிணைத்து உண்டு உறைவிடப் பள்ளியில் பயிற்சி வழங்கிட வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆசிரியர்கள் முழுமையாக உழைத்து மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் மாநில அளவில் 10 இடங்களுக்குள் வர அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். மாணவர்களிடம் அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி, அவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வுக்கு அவர்களை தயார்படுத்திட வேண்டும். இந்த பயிற்சியை அனைவரும் சரியாக பயன்படுத்தி, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் 113 பேரும், வரலாறு ஆசிரியர்கள் 39 பேரும் இந்த பயிற்சி பெற்றனர். இதே போல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயற்பியல் ஆசிரியர்கள் 125 பேரும், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆசிரியர்கள் 115 பேரும், பொருளியல் ஆசிரியர்கள் 50 பேரும் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர்கள் 4 பேர் வீதம் பயிற்சி அளித்தனர். 

Next Story