சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் நகரில் உள்ள 42 ரேஷன் கடைகள் முன்பும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் தக்கா தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், இளைஞரணி நிர்வாகிகள் சித்திக்அலி, தயா.இளந்திரையன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, ஒழுங்குமுறை விற்பனைக்கூட தொ.மு.ச. நிர்வாகி மாரிமுத்து மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், நிர்வாகிகள் செல்வராஜ், தயானந்தம், சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர். நகராட்சி 42-வது வார்டுக்குட்பட்ட எருமனந்தாங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் கோலியனூரில் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையிலும், நன்னாட்டில் ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையிலும், அத்தியூர்திருவாதியில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமையிலும், தென்னமாதேவி கிராமத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், தோகைப்பாடியில் ஒன்றிய பொருளாளர் காமராஜ் தலைமையிலும், கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பஞ்சமாதேவி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், வழுதாவூரில் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையிலும், காணை ஒன்றிய தி.மு.க. சார்பில் கல்பட்டு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜா தலைமையிலும், நல்லாப்பாளையத்தில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story