பரமத்திவேலூரில் கார் மோதி மெக்கானிக் பலி


பரமத்திவேலூரில் கார் மோதி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 22 Nov 2017 10:15 PM GMT (Updated: 2017-11-23T02:16:44+05:30)

பரமத்திவேலூரில் கார் மோதி மெக்கானிக் பலியானார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த நல்லுசாமி மகன் கோகுல்ராஜ் (வயது 22).

இவர் பரமத்திவேலூரில் உள்ள கார் பழுதுபார்க்கும் பட்டறையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு கோகுல்ராஜ் மொபட்டில் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் கோகுல்ராஜ் படுகாயமடைந்தார். அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் சக்திவேலை (43) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story