ரேஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடைகள் முன்பு சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாமக்கல்,

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நேற்று காலை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க. சார்பில் துத்திகுளம் ரேஷன் கடை முன்பு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொல்லிமலையில் செம்மேடு, பவர்காடு உள்ளிட்ட இடங்களில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையிலும், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூர் செயலாளர்கள் நடேசன், தனபாலன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், சாம்சம்பத், முன்னாள் பேரூராட்சி தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கபிலர்மலை ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதேபோல் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு டவுன் கைலாசம்பாளையம் ரேஷன் கடை முன்பு திருச்செங்கோடு நகர செயலாளர் நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டவுன் காந்திநகர் ரேஷன் கடை முன்பு வர்த்தக அணி அமைப்பாளர் கிரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சூரியம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் செழியன், வக்கீல் மாணிக்கவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருச்செங்கோடு அருகே மொளசியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜமாணிக்கம் தலைமையிலும், எலச்சிப்பாளையத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில் தலைமையிலும், பொம்மம்பட்டியில் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையிலும், விட்டம்பாளையத்தில் மாவட்ட துணை செயலாளர் சுகந்தி மணியம் தலைமையிலும், ஓ.ராஜாபாளையத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் நகர தி.மு.க. சார்பில் ஆவரங்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமையில் மணப்பள்ளி ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பேரூராட்சியில் பேரூர் தி.மு.க.செயலாளர் பொன்.நல்லதம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ரேஷன் கடை முன்பு 1 முதல் 3 வார்டுகளின் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை தாங்கினார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிதாசன்சாலை முல்லா சாகிபு தோட்டத்தில் முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு தலைமையிலும், சுவாமி சிவானந்தா சாலை வடக்கு காலனியில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவரும், மாவட்ட பிரதிநிதியுமான அரங்கசாமி தலைமையிலும், செக்கடி தெருவில் நகர துணை செயலாளர் ஆனந்தன் தலைமையிலும் சுப்பராய தெருவில் நகர அவைத்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் நேற்று 20 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரேஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.பி.கவுதம் தலைமை தாங்கினார். 

Next Story