சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 3:45 AM IST (Updated: 23 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்,

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மங்களூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் சர்க்கரையின் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் போது, கணேசன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக அரசு மக்களின் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. ஏரி, குளங்களை தூர்வாராமல், தூர்வாரியதாக கூறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் செய்து இருக்கிறது.

ஆனால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏரி, குளங்களை தூர்வாரியதன் மூலம், பல இடங்களில் தண்ணீர் பெருகி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது. கடலூர் மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரையில் 418 ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார். இதில் மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், பொன்முடி, குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிறுபாக்கத்தில் ரேஷன் கடை முன்பு தி.மு.க. ஊராட்சி செயலர் மருதமுத்து தலைமையிலும், எஸ்.புதூரில் ராமதாஸ், ரங்கசாமி ஆகியோர் முன்னிலையிலும், அரசங்குடியில் நிர்வாகி ராஜேந்திரன், பனையாந்தூரில் நிர்வாகிகள் ஜெயராமன், குமணன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெய்வேலி நகர தி.மு.க. சார்பில் மெயின் பஜாரில் உள்ள ரேஷன் கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர பொறுப்புக்குழு பக்கிரிசாமி தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதில் என்.எல்.சி. தொ.மு.ச. தலைவர் வீர.ராமச்சந்திரன், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, மாவட்ட விவசாய அணி ஞானமணி, ஊராட்சி செயலாளர் சபா.பாலமுருகன், நெய்வேலி நகர பொறுப்புக்குழு நன்மாறபாண்டியன், நடராஜன், இளங்கோ, செந்தில்குமார், ரவிசந்திரன், ராம. கருப்பன், மாவட்ட தொண்டரணி மணிவண்ணன், ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் வெங்கடேசன், லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் சாவடிக்குப்பத்தில் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் அங்குள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு, தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், பி.வி.பி.முத்துக்குமார், இளைஞரணி பொன்கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் இளங்கோவன், நம்பிராஜன், பாண்டியன், சுந்தரமூர்த்தி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் பழைய ஜெயில் வீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்தில் நகர துணை செயலாளர் ராமு, இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, வள்ளலார் குடில் இளையராஜா, வக்கீல்கள் மணிகண்டராஜன், சரவணன், நிர்வாகிகள் கர்ணன், சிவா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி பகுதியில் 49 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திட்டக்குடி ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பரமகுரு, நகர இளைஞரணி அமைப்பாளர் எட்வின் விஜயக்குமார், நகர அவைத்தலைவர் தங்கமணி, பூலோகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம் அருகே உள்ள பெ.கொள்ளத்தங்குறிச்சியில் ஒன்றிய செயலாளர் கோதண்டபாணி தலைமையிலும், இறையூரில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜராஜசோழன் தலைமையிலும், கூடலூரில் மாவட்ட பிரதிநிதி ஜெய ராமன் தலைமையிலும், தாழநல்லூரில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கொளஞ்சியப்பன் தலைமையிலும், கொத்தட்டையில் தொண்டரணி அமைப்பாளர் ராஜீவ்காந்தி தலைமையிலும், அருகேரியில் ஒன்றிய துணை செயலாளர் அமுதாவேல்முருகன், ஊராட்சி செயலாளர் ரங்கசாமி ஆகியோர் தலைமையிலும் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே வல்லம்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு குமராட்சி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் சேரன், மஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர், நிர்வாகிகள் சந்தனக்குமார், பரந்தாமன், சந்திரகாசி, செல்வம், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் சிதம்பரம் அம்மாபேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன், நிர்வாகிகள் இளவரசு, பரந்தாமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story