தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
“இரட்டை இலை” விவகாரத்தில் நடுநிலையோடு செயல்படாததால் தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
சேலம்,
சென்னையில் இருந்து கார் மூலம் டி.டி.வி.தினகரன் சேலம் வழியாக நேற்று மதியம் கோவைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“இரட்டை இலை” சின்னம் தீர்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது, 122 எம்.எல்.ஏ.க்களும், 37 எம்.பி.க்களும் ஆதரவு இருந்த எங்களது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. ஆனால் இப்போது, நீதிபதி சாதிக் அலி தீர்ப்பை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி 111 எம்.எல்.ஏ.க்கள் உள்ள அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்திருப்பது எப்படி?.
எனவே, இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. இதனால் தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். எம்.ஜி.ஆர்.உருவாக்கிய அ.தி.மு.க.சட்ட திட்டத்தின் விதிப்படி சாதிக் அலி தீர்ப்பு என்பது நமது கட்சிக்கு பொருந்தாது.
அதாவது அடிப்படை உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ? அதை வைத்து தான் கட்சி யாரிடம் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் விருப்பத்தின்படி அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் தரப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் 12 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் இருந்தபோது இரட்டை இலை சின்னத்தை முடக்கினார்கள். அப்போது நீதிபதி சாதிக்அலி தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை என்பது தெரியவில்லை. 99 சதவீத அ.தி.மு.க.தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இரட்டை சிலை சின்னமும், கட்சியும் குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கி இருக்கிறது. அதை நிச்சயம் போராடி நாங்கள் மீட்டெடுப்போம். எடப்பாடி பழனிசாமிக்கு 111 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப் பேரவையில் அறுதி பெரும் பான்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரிடம் மனு கொடுத்துள்ளோம். கவர்னர் யார்? அவர் மத்திய அரசின் பிரதிநிதி. இதை நீதிமன்றத் திலும், மக்கள் மன்றத்திலும் எடுத்து செல்வோம். எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் நான் தான் ஏற்கனவே வேட் பாளராக போட்டி யிட்டேன். தற்போதும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன். ஆரம்பத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு, அதன்பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதுஓ.பன்னீர் செல்வத்தின் நிலைமை விரைவில் என்ன ஆகப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

Related Tags :
Next Story