எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம்: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம்: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியதையடுத்து நேற்று சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முன்னாள் அட்மா திட்ட குழு தலைவர் கோவிந்தன் தலைமையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரை, ஊராட்சி கழக செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

எடப்பாடியில் நகர செயலாளர் ராமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சேகர், நாராயணன், முருகன், செங்கோடன், உத்திரராஜ், ஜெமினி சீனி உள்பட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி, சித்தூர், வெள்ளரிவெள்ளியில் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பூலாம்பட்டி பாலு, அசோக், தேவராஜன், காந்தி உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஓமலூர் பயணியர் மாளிகையில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து, பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். எம்.எல்.ஏ. வெற்றிவேல் பஸ்சில் சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பச்சியப்பன், ஓமலூர் நகர செயலாளர் சரவணன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், தளபதி, பாலிகடை பெரியசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முருகன், காடையாம்பட்டி ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காடையாம்பட்டி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு காடையாம்பட்டி நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் நகர பேரவை செயலாளர் ஆனந்தன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ரங்கநாதன், மணி, ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் தலைவாசல் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் வக்கீல் வேல்முருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மெய்யன், பாலகிருஷ்ணன், வரகூர் ராமசாமி, சிறுவாச்சூர் பெரியசாமி, பெரியேரி சேகர், மும்முடி மேலவை பிரதிநிதி செந்தில்குமார், காட்டுக்கோட்டை துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைவாசல் தெற்கு ஒன்றியம் சார்பில் தலைவாசல் யூனியன் அலுவலகம் எதிரே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமையில் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் செல்ல கருப்பண்ணன், ஒன்றிய துணை செயலாளர் செல்லம்மாள் முத்துசாமி, முன்னாள் தலைவாசல் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிங்காரம், பெரியண்ணன், பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் காசிலிங்கம், கந்தசாமி, புனல்வாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எழிலரசி சின்னசாமி, தலைமைக் கழக பேச்சாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி பழைய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு சங்ககிரி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.மணி தலைமை தாங்கி, இனிப்பு வழங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், சங்ககிரி நகர செயலாளர் செல்லப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் ராஜா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவகுமரன், தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பூமலை, பூங்கொடி, இளைஞர் அணி செயலாளர் நீதிதேவன் நடராஜன், சங்ககிரி நகர மகளிர் அணி செயலாளர் மங்கையர்கரசி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆட்டையாம்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வீரபாண்டி ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் மெயின் ரோடு வரை வீரபாண்டி பி.மனோன்மணி எம்.எல்.ஏ. தலைமையில், ஏராளமான அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது இரட்டை இலை சின்னத்துடன் கூடிய பேனர்களையும், எடப்பாடி பழனிசாமி படத்தையும் கொண்டு சென்றனர். பின்னர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வருதராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய அவைத் தலைவர்கள் வீரப்பன், தங்கவேல், மாவட்ட பேரவை துணைச் செயலாளர் சிவகுமார், அரியானூர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் விஜயா தைலான், ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமார், ராஜூ, முன்னாள் கவுன்சிலர்கள், ஏ.டி.சி. தொழிற்சங்க தலைவர் நல்லப்பன் உள்பட வீரபாண்டி மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க.வினரும், ஜெ.பேரவையினரும், எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், மகளிர் அணியினரும், ஊட்டுறவு சங்க பிரதிநிதிகளும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களும், ஊராட்சி செயலாளர்களும், கிளைக்கழக செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

Next Story