இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது மைசூருவில் 83–வது கன்னட இலக்கிய மாநாடு முதல்–மந்திரி தொடங்கி வைக்கிறார்


இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது மைசூருவில் 83–வது கன்னட இலக்கிய மாநாடு முதல்–மந்திரி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 23 Nov 2017 9:02 PM GMT (Updated: 23 Nov 2017 9:02 PM GMT)

மைசூருவில் இன்று தொடங்கும் 83–வது கன்னட இலக்கிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

மைசூரு,

மைசூருவில் இன்று தொடங்கும் 83–வது கன்னட இலக்கிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

கன்னட இலக்கிய மாநாடு

மைசூரு மாநகரில் 27 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இது 83–வது கன்னட இலக்கிய மாநாடாகும். இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கும் இந்த மாநாடு 26–ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்க உள்ளார். அப்போது கன்னட கவிதை அரங்கம், பயிலரங்கம், கருத்தரங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வு கட்டுரைகள் குறித்த விவாதங்கள் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டையொட்டி லட்சக்கணக்கானோர் மைசூருவுக்கு வருவார்கள் என்பதால் முக்கிய சாலைகள், பூங்காக்கள் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவைகள் இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

மைசூரு மாநகரில் அனைத்து இடங்களிலும் கன்னட கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அனைத்து இடங்களிலும் ஒலி பெருக்கி மூலம் மாநாடு குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஒலி பெருக்கி மூலம் மாநாட்டு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட உள்ளன. மாநாட்டையொட்டி அலங்கார வண்டிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மாநாடு முடியும் வரை அலங்கார வண்டிகள் மாநகரம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களுக்காக உணவுத்துறை சார்பில் 3 இடங்களில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினர்களுக்கு ஒரு இடத்திலும், முக்கிய பிரமுகர்களுக்கு ஒரு இடத்திலும், பொதுமக்களுக்கு ஒரு இடத்திலும் உணவுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Next Story