தொடர் மழை எதிரொலி: தூத்துக்குடி விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது 2 விமான சேவை ரத்து


தொடர் மழை எதிரொலி: தூத்துக்குடி விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது 2 விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 1 Dec 2017 2:15 AM IST (Updated: 30 Nov 2017 9:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி சென்றது.

விமான சேவை

தூத்துக்குடி–சென்னை இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் இருந்து காலையில் புறப்பட்ட விமானம் 77 பயணிகளுடன் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு காலை 11–40 மணியளவில் வந்தது. அப்போது விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக விஜிலாசத்யானந்த் எம்.பி உள்பட 73 பயணிகள் காத்து இருந்தனர். அவர்களில் சிலர் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். சிலர் பயணத்தை மாற்றி அமைத்தனர்.

ரத்து

மேலும் தொடர்ந்து வானிலை மோசமாக இருந்ததால், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மாலையில் வரக்கூடிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று தூத்துக்குடி–சென்னை இடையேயான 2 விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளானார்கள்.


Related Tags :
Next Story