அருணாசலேஸ்வரர் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் நிலையம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் நிலையத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னதான கூடத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் புதிய சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ராமசர்மா, ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, திருவண்ணாமலை கிளை மேலாளர் குணசேகர், அதிகாரி இளஞ்செழியன் மற்றும் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story