மழைநீர் வெளியேறுவதற்காக துண்டிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி


மழைநீர் வெளியேறுவதற்காக துண்டிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2017 4:00 AM IST (Updated: 1 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் வெளியேற துண்டிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்டது வள்ளுவர் நகர். இங்கு கடந்த மாதம் பெய்த மழையில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை உருவானது. தொடர்ந்து மழைநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து மாசடைந்த மழைநீரை வெளியேற்றுவதற்காக வள்ளுவர்நகர் முன்பு செல்லும் திருவெற்றியூர் நெடுஞ்சாலையை துண்டித்தனர். இதையடுத்து தேங்கி நின்ற மழைநீர் வெளியேறியது.

ஆனால் நெடுஞ்சாலையை துண்டித்து பள்ளம் ஏற்படுத்தப்பட்ட பகுதியை மூடாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மழை பெய்ததாலும் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது லாரி ஒன்று ஏறி விபத்துக்குள்ளானது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story