சேதமடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்று மற்றும் கன மழை காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். நாகர்கோவிலில் இருந்து காரில் புறப்பட்ட அவர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பார்வதிபுரம், சுங்கான்கடை பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை உடனே வெட்டி அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார்.
சில இடங்களில் மரங்களை அகற்றும் பணி நடந்தது. அந்த பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தினார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகளும் சென்றனர்.