‘மும்பையின் கவுரவத்தை வட இந்தியர்கள் உயர்த்தினர்’ முதல்–மந்திரி பேச்சு
மும்பை நகரின் கவுரவத்தை வட இந்தியர்கள் உயர்த்திவிட்டார்கள் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
மும்பை காட்கோபரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–இன்றைக்கு நாம் மும்பையையும், மராட்டியத்தையும் பார்க்கும்போது, உடனடியாக வட இந்தியர்களையும் காண்கிறோம். இந்த நகரம் ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் அளித்து இருக்கிறது. இங்கு அடைக்கலம் புகுந்தவர்கள், மும்பையின் கவுரவத்தை உயர்த்தி இருக்கின்றனர். இன்றைக்கு மும்பையில் அடைக்கலம் புகுந்த வட இந்தியர்கள், நகரின் கவுரவத்தை உயர்த்த பாடுபடுகிறார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story