சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை
மதுரை காந்தி மியூசியத்தில் ராஷ்டிரிய சுவாபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு நிர்வாகிகள் அறிமுகம், சமூக ஆர்வலர்கள் சந்திப்பு, தேசிய சிந்தனையாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.
மதுரை,
மதுரை காந்தி மியூசியத்தில் ராஷ்டிரிய சுவாபிமான் அந்தோலன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு நிர்வாகிகள் அறிமுகம், சமூக ஆர்வலர்கள் சந்திப்பு, தேசிய சிந்தனையாளர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவை நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கொள்ளு பேத்தி ராஜ்ய ஸ்ரீசவுத்ரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அமைப்பின் நிறுவனர் கோவிந்தாச்சாரியா சிறப்புரையாற்றி தேசிய சிந்தனையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளார் மாயாதேவிசங்கர் நன்றி கூறினார்.
முன்னதாக மதுரை கூடல்புதூரிலுள்ள மத்திய அரசின் பொதுப்பணித்துறை அலுவலர்கள் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்யஸ்ரீசவுத்ரி கூறும்போது, எனது கொள்ளு தாத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை. அவரது இறப்பு குறித்த உண்மையாக தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றார்.