சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2017 9:45 PM GMT (Updated: 1 Dec 2017 8:08 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு இயற்றியது.

சேலம்,

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு இயற்றியது. ஆனால், தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசின் மெத்தனபோக்கை கண்டிக்கும் வகையிலும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் அம்மாசி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடாசலம், நடராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஞானசவுந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.


Next Story