அடுத்தது, ‘தலைமாற்று’ அறுவைசிகிச்சை?


அடுத்தது, ‘தலைமாற்று’ அறுவைசிகிச்சை?
x
தினத்தந்தி 2 Dec 2017 12:59 PM IST (Updated: 2 Dec 2017 12:59 PM IST)
t-max-icont-min-icon

தலைமாற்று அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

றுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் பலவும் வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில், அடுத்ததாக தலைமாற்று அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

சடலம் ஒன்றுக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, இதே தொழில்நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கும் தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுவது சகஜமாகி விட்டதால், அதன் அடிப்படையில் தலைமாற்று அறுவைசிகிச்சை நடத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரஷியாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதிநோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவைசிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார்.

இதன்மூலம், முதல்முறையாக தலைமாற்று அறுவைசிகிச்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில், ஒரு சடலத்துக்கு தலைமாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர் செர்ஜியோ கனோவெரா தலைமையிலான குழுவினர் இந்த அறுவைசிகிச்சையை செய்துள்ளனர்.

சுமார் 18 மணி நேரம் இந்த அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது. அப்போது புதுவிதமான தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தலையுடன் பொருத்தப்பட்டன.

இச்சோதனை வெற்றிபெற்றதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். எனவே இதே தொழில்நுட்பத்துடன், உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவைசிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையின் வளர்ச்சி, மலைப்பூட்டுவதாக இருக்கிறது! 

Next Story