கார்த்திகை தீபத்தையொட்டி 700 சிறப்பு பஸ்கள் இயக்கம்


கார்த்திகை தீபத்தையொட்டி 700 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2017 3:15 AM IST (Updated: 3 Dec 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை,

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 63 நாயன்மார்கள் வீதிஉலா கடந்த நவம்பர் 28-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மகா தீப நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று 700 பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story