சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராமமக்கள் புகார்: தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் அறிவுறுத்தல்


சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராமமக்கள் புகார்: தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2017 4:15 AM IST (Updated: 3 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராமக்கள் புகார் செய்ததை தொடர்ந்து தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள வம்பு பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஒருவர் வீடு கட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கவர்னர் கிரண்பெடிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதன் அடிப்படையில் நேற்று காலை அந்த இடத்துக்கு கவர்னர் கிரண்பெடி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புகார் கொடுத்தவர்களிடமும், வீடுகட்டி குடியிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் வில்லியனூர் துணை கலெக்டர் உதயகுமார், தாசில்தார் மேத்யூ ஆகியோரை அழைத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெண்களிடம் கவர்னர் கிரண்பெடி குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது பெண்கள் தங்கள் பகுதிக்கு பஸ்கள் சரியாக வருவதில்லை. இங்குள்ள தனியார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

உடனே திருக்கனூர் போலீசாரை அழைத்து, பொதுமக்கள் புகார் கூறும் தொழிற்சாலையை ஆய்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தெரியவந்தால் அந்த தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பின்னர் அங்குல்ள ஏரிக்கரையை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்.


Next Story