மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது


மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது
x
தினத்தந்தி 2 Dec 2017 10:24 PM GMT (Updated: 2 Dec 2017 10:23 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியில் 23.3 அடி தண்ணீரை சேமிக்க முடியும். ஏரியில் 6 மதகுகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த வடகிழக்கு பருவமழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து 22.3 அடியானது.

அதன் பின்னர் அந்த பகுதியில் பெய்த மழை மற்றும் உத்திரமேரூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் போன்றவற்றால் மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது. நேற்று காலை முழு கொள்ளளவை எட்டியது.

ஏரிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 8 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

இந்த தண்ணீர் கிளியாறு வழியாக செல்வதால், கிளியாற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மதுராந்தகம் தாசில்தார் கவுசல்யா அறிவுறுத்தி உள்ளார்.


Next Story