சேற்றுக்குள் வாழ்வது சுகமானது
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆண்டு களுக்கு பின்னர் பருவ மழை பொழிந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆண்டு களுக்கு பின்னர் பருவ மழை பொழிந்திருக்கிறது. பருவம் தவறினாலும், கிடைத்த தண்ணீரை வீணாக்காமல் உழவர்கள் ஏர் பிடித்து.. இல்லை டிராக்டர் ஓட்டி உற்சாகமாக விவசாயப் பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தின் நெற்களஞ்சியமான கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வயல்வெளிகள் அனைத்தும் பச்சை ஆடை உடுத்தத்தொடங்கி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வரை வறட்சியால் காய்ந்து வெடித்துப்போயிருந்த விவசாய நிலங்கள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தால் பசுமை அடைந்துள் ளன.
கோபி அருகே உள்ள பாரியூர் தொட்டிபாளையம் பகுதியில் ஒரு புறம் உழவும், மறு புறம் நடவும் நடந்துகொண்டிருக்க அங்கே இளம் பெண்கள் சிலர் ஒய்யாரமாக நாற்றுகளை சுமந்து செல்லும் காட்சி வித்தியாசமாக இருந்தது. விவசாய குடும்பங்களிலேயே நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட யோசிக்கும் இந்த காலத்தில் சேற்றில் கால்வைத்த இளம்பெண்கள் கொஞ்சம் மாறுதலாகவே தென்பட்டார்கள்.
சிறுகொப்பு வாய்க்கால் வழியாக நாமும் நடந்து அந்த வயல்வெளி பகுதிக்கு சென்றோம். தூரத்தில் நாற்று நடும் அன்றாட விவசாய பெண்கள் கருமமே கண்ணாயிருக்க, சலசலப்பாக நாற்றுகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள் இந்த புதிய விவசாயி களான இளம்பெண்கள்!
அவர்களுக்கு நாற்று பிடுங்குவது, நாற்று பிரிப்பது குறித்து தெளிவாக விளக்கிக்கொண்டிருந்தார், கோபி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி. அந்த பெண்கள் அனைவரும் கோவை வேளாண் பல்கலைக் கழக இறுதி ஆண்டு மாணவிகள். வேளாண் பல்கலையில் படிக்கும் மாணவ-மாணவி களுக்கு 90 நாட்கள் ‘கிராமத் தங்கல்’ என்கிற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்கள் இவர்கள் குறிப்பிட்ட ஒரு ஒன்றியப்பகுதிக்கு சென்று அங்குள்ள விவசாயிகளை சந்திப்பது-அங்கே விளையும் பயிர்கள் குறித்து விவசாயிகளிடம் நேரடியாக தெரிந்து கொள்வது-வயல்வெளியில் களப்பணி செய்வது.. என்றெல்லாம் அந்த பயிற்சி நீள்கிறது. அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது நாற்று பிடுங்கி, நடவு செய்வது. அதில் 11 மாணவிகள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள்தான் நம்மைக் கவர்ந்த புதிய விவசாயிகள்.
அவர்களது கால்கள் சேற்றில் புதைந்திருந்தன. நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது. நாற்று நடவில் வல்லுனர்களாக இருக்கும் கூலித் தொழிலாளிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு பணி செய்தார்கள். ஒற்றை நெல் நடவுமுறையில் தனிப்பயிற்சி பெற்ற அந்த பகுதி விவசாயி பழனிச்சாமியின் அறிவுரையோடு அழகாக நடவில் ஈடுபட்டார்கள். வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாய வேலைகளை செய்து முடித்துவிட்டு, கால்வாயில் வழிந்தோடிய தண்ணீரில் கால்களை நனைத்து சேற்றை கழுவிவிட்டு வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
‘‘டில்லர் ஓட்டி உழவு செய்து, எருது ஓட்டி சமன் செய்து, மண்வெட்டியால் வரப்பு வெட்டி அப்பப்பா... வகுப்பறை ஏட்டுக் கல்விக்கும், வயல்வெளி யதார்த்த கல்விக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன'' என்று தனது கருத்தை எடுத்துவைத்தார், கே.அபிநயா.
‘‘3 ஆண்டுகள் வேளாண் கல்லூரியில் பல்வேறு பாடங்களை படித்தோம். படிக்கும்போது விவசாயம் என்றால் இவ்வளவுதானா என்று தோன்றும். விதை முளைக்கவைத்தல் என்று ஒற்றை வரியில் படித்து விடலாம். ஆனால் விதையை முளைக்க வைக்க எத்தனை காலம், எத்தனை உழைப்பு தேவை என்பது நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. விவசாயம் என்பது ஒரு தொழில் இல்லை. அது நமது வாழ்க்கை..'' என்று தத்துவார்த்தமாக பேச்சை தொடங்கிய எஸ்.ஹரிணி, ‘‘நான் மருத்துவப்படிப்பு பிடிக்காமல் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தேன். கல்லூரியில் அதன் மீது ஏற்படாத ஈர்ப்பு, இப்போது கிராமத்தங்கல் திட்டத்துக்காக வந்தபோது ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்தின் உண்மையை இங்கேதான் பார்க்கிறேன்'’என்று நெகிழ்ந்தார்.
‘‘முன்பு வீட்டுக்கு காய், பழங்கள் வாங்கும்போது, யாரோ எங்கி ருந்தோ இதை எல்லாம் கொண்டு வர்றாங்க என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் ஒரு காய் காய்ப்பதற்கும், கனியாவதற்கும் ஒரு விவசாயி எவ்வளவு தியாகம் செய்கிறார் என்பதை அறிந்தபோது சிலிர்த்துப்போனேன். இப்போதெல்லாம் தட்டில் உணவை வைக்கும்போதே விவசாயிகளின் சேவையை நினைத்துப்பார்க்கிறேன். ரசித்து, ருசித்து சாப்பிட்டு உணவுக்கு மரியாதை செய்கிறேன்'’என்றார், ரம்யா.
‘‘வயலில் சேற்றில் இறங்கவே முன்பு பயந்தேன். காலில் அழுக்குப்படும். கல் ஏதேனும் கிடந்தால் காலை கிழித்துவிடும் என்றெல்லாம் நினைத்து கலங்குவேன். இப்போது சேற்றில் இறங்குவதே ஒரு சுகமான அனுபவமாகிவிட்டது. சேற்றில் இறங்கியிருக்காவிட்டால் சோற்றின் அருமை எனக்கு தெரியாமலே போயிருக்கும்’' என்று சிலிர்க்கும் அபிநயா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர். ‘‘எங்கள் பகுதியில் பெண்கள் தொடர்ந்து படிப்பது என்பது ஆச்சரியமான விஷயம். என்னுடன் 80 மாணவிகள் பிளஸ்-டூ படித்தனர். அதில் ஐந்து பேரே கல்லூரிக்கு செல்கிறோம். தடைகளை உடைத்து கல்லூரிக்கு வந்த நான் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை படிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. எனது ஆசை எல்லாம், நமது பாரம்பரிய விதைகளை மீட்டு மீண்டும் புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதற்காக ஒரு விதை ஆராய்ச்சி நிலையம் தொடங்க வேண்டும்'’ என்று தனது லட்சியத்தை கூறினார்.
‘‘முற்காலத்தில் வறட்சியில் கூட நெல் விளைவித்து அறுவடை செய்ததாக எனது அப்பா கூறுவார். ஆனால் இப்போது தண்ணீர் பற்றாக்குறை என்றாலே பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. அதைவைத்து பார்க்கும்போது நமது வேளாண்மை முறையில் எங்கோ தவறு ஏற்பட்டு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதை கண்டறிந்து களை எடுக்க வேண்டும். நான் உயர் படிப்பில் உழவியல் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறேன்'’ என்றார் எஸ்.ஜெ.வைஷ்ணவி.
கோவை, நாமக்கல், ஊத்துக்குளி, திருச்சி, மாணவிகளுடன் இணைந்து இந்த பயிற்சிக்கு வந்திருந்த அனாமிகா சட்டோபாத்தியா, பிரியங்கா டாக்குவா ஆகியோர் அந்தமான் நிகோபர் தீவுகளை சேர்ந்தவர்கள். பிற மாநிலத்தவர் இடஒதுக்கீட்டின் கீழ் கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் இவர்களும் விவசாய பணிகளில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்.
"எங்கள் பகுதியில் கடலும், தீவுக்கூட்டங்களும்தான் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களாக நிறைந்திருக்கும். இங்கு விதவிதமான பயிர்களை விளைவிக்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பயிர்களை எல்லாம் எங்கள் தீவுகளிலும் வளரச்செய்ய வேண்டும் என்று விரும்பு கிறேன். சிறுவயதிலேயே எங்கள் பெற்றோர் விவசாயம் குறித்து சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். எனவேதான் வேளாண்மையை தேர்ந்து எடுத்தோம். எங்கள் படிப்பு முடிந்ததும் மேல் படிப்பில் வேளாண்மை ஆராய்ச்சியை மேற்கொள்வோம்'’ என்றார்கள், அந்த இரு மாணவிகளும்!
இவர்களுடன் வந்திருந்த பி.ரூபி நகான் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர். ‘‘எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. அங்கு தென்னை மரம் மட்டுமே உள்ளது. அதில் வேறு பயிர்களை விளைவிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். உயர் படிப்பில் வேளாண்மை பொருளாதாரம் குறித்து படித்து ஆராய்ச்சி மேற்ெகாள்வதுடன், இந்திய வேளாண் பணி தேர்வு எழுதி அதிகாரியாகும் கனவும் இருக்கிறது’' என்றார்.
வேளாண்மையில் எம்.பி.ஏ. படித்து வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி, அதற்கான நிறுவனம் நடத்துவதே தனது ஆசை என்றார் பி.வி.ஷிபானி! எஸ்.ஷிபானி, மாலினி, மைதிலி போன்ற மாணவிகளும் புதுமையான விவசாய கனவுகளோடு இந்த கல்வியை கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
‘விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக விளைபொருட்களை வாங்க வேண்டும். இடைத்தரகர்கள் என்ற பேச்சே இல்லாத நிலை உருவாகவேண்டும். அப்போதுதான் பொருளாதார ரீதியாக விவசாயத்தை செழிக்க வைக்கமுடியும்’ என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். மாணவிகளுக்கு வழிகாட்டிகளாக வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி, உதவி வேளாண் அதிகாரி ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் ஆகியோர் செயல்பட்டார்கள்.

Related Tags :
Next Story